சென்னையில் தாம்பரம், மலைமேடு, காமராஜர் நகர் பல்லாவரத்தில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததால், 33 பேர் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் மூன்று பேர் உயிரிழந்துவிட்டனர். 10க்கும் மேற்பட்டோர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். குடிநீரில் சாக்கடை நீர் கலந்தது தமிழக அரசின் நிர்வாக அலட்சியத்தின் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கின்றது. 3பேரின் உயிரிழப்பிற்கு தேமுதிக சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். திறமை இல்லாத திராவிட மாடல் ஆட்சிக்கு இதுபோன்ற சம்பவங்களே சான்றாக உள்ளது. இதையெல்லாம் கவனித்துக் கொள்ளாமல், தன்னுடைய ஆட்சியை நல்லாட்சி என்றும், மக்கள் மீது அக்கறை கொண்ட ஆட்சியாகவும், தினந்தோறும் விளம்பரம் படுத்திக் கொள்வதிலேயே இந்த ஆட்சி கவனம் செலுத்துகின்றது. மக்களின் உயிரின் வலியை பொருட்படுத்தாததால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாக இந்த ஆட்சியில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. தமிழக அரசு மக்கள் மீது முழு கவனம் செலுத்தி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும். சிகிச்சை பெற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் வழங்கி முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
