Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த சோகத்தையும், வேதனையையும் அளிக்கிறது. இளம் வயதிலேயே தனது உயிரை இழந்த மிஸ்ஹாபின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான இழப்பை தாங்கிக் கொள்ளும் மனவலிமையை அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இறைவன் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். மேலும், வனவிலங்குகளின் தாக்குதலால் மனித உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க அரசு மற்றும் வனத்துறை கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இனி இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Releated Posts

மேகதாது அணை விவகாரம், தமிழக அரசு டில்லி பிரதிநிதி நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டி அறிக்கை

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக திரு.வெங்கடநாராயணா  அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை தேமுதிக சார்பில் கடுமையாக கண்டிக்கிறோம். ஏற்கனவே கர்நாடக மாநில முதலமைச்சர்…

ByBySenthil KumarJun 27, 2026

பிரபல திரைப்பட இயக்குனர், நடிகர் திரு.பாக்யராஜ்  அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான திரு.பாக்யராஜ் அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று (27.06.2026) காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.தமிழ்த் திரையுலகின்…

ByBySenthil KumarJun 27, 2026

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவு, பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும்.…

ByBySenthil KumarJun 24, 2026

அமோனியா வாயு கசிவுவால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சகரணை (கன்னிகைப்பேர்) பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர்ஸ் பால் சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட…

ByBySenthil KumarJun 24, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...