கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு தேமுதிக சார்பாக நாங்கள் வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறோம். கள்ளக்குறிச்சி மற்றும் தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை இன்றைக்கு வெற்றி அடைந்திருக்கிறது. எனவே உண்மை நிலை மக்களுக்குத் தெரியப்படுத்த ஆளுங்கட்சியின் உடைய தலையீடு இல்லாமல், சிபிஐ நல்ல ஒரு தீர்ப்பை மக்களுக்கு வழங்க வேண்டும். கள்ளச்சாராய வழக்கில் பல உயிர்களை நாம் இழந்துள்ளோம் எனவே அவர்கள் குடும்பத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். மேலும் உண்மை நிலையைக் கண்டறிந்து அதில் யாரெல்லாம் கள்ளச்சாராய வழக்கில் ஈடுபட்டு இருக்கிறார்களோ அவர்களுக்கு உரியத் தண்டனையும் பெற்றுத் தர வேண்டும் என தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
