Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த நபரை (மாணிக்கம் – வயது 31), அச்சிறுமியின் பாட்டி துணிச்சலுடன் எதிர்கொண்டு, கத்தியை (அரிவாள்) பயன்படுத்தி தடுத்து நிறுத்தியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதும், வரவேற்கத்தக்கதுமான செயலாகும்.

தனது பேத்தியை காப்பாற்றுவதற்காக எவ்வித அச்சமுமின்றி துணிச்சலுடன் எதிர்த்து நின்ற அந்த பாட்டியின் தைரியம், பெண்களின் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது. இன்று (14.08.2026) ஆடிப்பூரம் திருநாள் கொண்டாடப்படும் நிலையில், பெண் சக்தியையும், துணிச்சலையும் போற்றும் வகையில், அந்த பாட்டியை ஆண்டாளின் அவதாரமாகவே பார்க்கத் தோன்றுகிறது. தன்னுடைய பேத்தியை காப்பாற்றுவதற்காக அவர் வெளிப்படுத்திய வீரமும், தைரியமும், ஒவ்வொரு பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவங்களில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேவேளையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான பாதுகாப்பு, மருத்துவ உதவி ஆகியவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும்.

நான்கு வயது சிறுமியை காப்பாற்றிய அந்த பாட்டியின் துணிச்சலுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆடிப்பூரம் நாளில் பெண் சக்தியின் அடையாளமாக திகழ்ந்த அந்த பாட்டி, உண்மையிலேயே போற்றப்பட வேண்டியவர் ஆவார்.

Releated Posts

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி அறிக்கை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்தும், பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றியும் வரும் பருவகால…

ByBySenthil KumarSep 21, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 22ஆம் ஆண்டு துவக்க நாள் முன்னிட்டு கழகத்தின் கொள்கைகள் மற்றும் கேப்டன் அவர்களின் கொள்கைகள் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கொள்பவர்கள் விபரம்

வ. எண்மாவட்டத்தின் பெயர்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பெயர் / பதவி1தருமபுரி கிழக்குதிரு.டாக்டர்.V.இளங்கோவன்,M.B.B.S., அவர்கள் கழக அவைத்தலைவர்2தென் சென்னை வடக்கு தென் சென்னை தெற்குதிரு.L.K.சுதீஷ்,B.A.,MP., அவர்கள்,…

ByBySenthil KumarSep 21, 2026

தேமுதிக – தந்தை பெரியார் அவர்களின் 148வது பிறந்தநாள் – பத்திரிகை செய்தி – 17.09.2026

தந்தை பெரியார் அவர்களின் 148 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2026) தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள்…

ByBySenthil KumarSep 17, 2026

தேமுதிக – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A.,MLA., அவர்களின் தலைமையில் இன்று 16.09.2026 புதன் கிழமை காலை 10.30…

ByBySenthil KumarSep 16, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...