Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • ஏழை தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து கிட்னியை பறித்து, கிட்னி மோசடி விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தன்டனை வழங்க வேண்டி அறிக்கை

ஏழை தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து கிட்னியை பறித்து, கிட்னி மோசடி விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தன்டனை வழங்க வேண்டி அறிக்கை

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் விசைத் தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். ஏழை தொழிலாளர்களை குறிவைத்து, புரோக்கர்கள் மூலம் மூளைச்சலவை செய்து, கிட்னி விற்பனை பல ஆண்டுகளாக நடந்துள்ளது. இது பெரும் கண்டனத்திற்கு உரியது. மேலும் “வறுமையின் காரணமாக கடனை அடைக்க என் கிட்னியை விற்றேன், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிட்னி எடுக்கப்பட்டது என்று பாதிக்கப்பட்ட ஒரு நபர் தெரிவித்து இருக்கிறார். ரியல் எஸ்டேட் செய்யும் புரோக்கர்கள் போன்று கிட்னி புரோக்கர்களாக மாறி இருக்கின்றார்கள். கிட்னியை விற்று, கிட்னி மோசடி விற்பனையில் ஈடுபட்டவர்கள் அனைவறையும் கன்டறிந்து உறிய தன்டனை வழங்க வேண்டும். இதில் ஒரு சில காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி உடல் உறுப்புகளை விற்று வியாபாரம் செய்யும் கயவர்களை கண்டறிந்து, உரிய தண்டனை வழங்கி, இந்த அரசு ஏழை மக்களுக்கு உதவிட வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்காத வண்ணம் இந்த அரசு பொறுப்பேற்க வேண்டும்.

Releated Posts

ரத்தன் பண்டிட் அவர்களை அரசு பணியில் நியமித்ததை ரத்து செய்த தமிழக முதலமைச்சர் திரு.விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

தமிழக முதலமைச்சர் திரு.விஜய் அவர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும், கேப்டன் அவர்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜோதிடர் ரத்தன்…

ByBySenthil KumarMay 13, 2026

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய மற்றும்  வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ – மாணவிகளுக்கும் வாழ்த்துகள்

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி, அதில் தங்களின் அர்ப்பணிப்பாலும் கடின உழைப்பாலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற அனைத்து மாணவ…

ByBySenthil KumarMay 8, 2026

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நேற்று (05.05.2026) நிகழ்ந்த வாகன விபத்தில் அவர் உயிரிழந்தார் என்கிற செய்தி…

ByBySenthil KumarMay 7, 2026

மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.…

ByBySenthil KumarMay 5, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...