அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்கார துயர சம்பவம் குறித்து முதலமைச்சர் இதுவரை பதிலளிக்காதது ஏன்?. அண்ணா பல்கலைக்கழகத்தில் திடீரென்று சிசிடிவி கேமராக்கள் பழுதானது ஏன்?, இச்சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என அமைச்சர் மன்றாடியது ஏன்?. மாணவர்கள் போராட்டம் நடத்தும் வரை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யாதது ஏன்?. அனைத்து கேள்விகளுக்கும் ஒரே விடை கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர் திமுகவைச் சேர்ந்தவரா? என்பதை மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். மிக முக்கியமான கல்லூரியிலேயே இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் பொழுது இங்கு படிக்கும் மாணவிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. ஆர்ப்பாட்டம் செய்பவர்களை மட்டும் அடக்குவதால், மாணவிக்கு நடந்த கொடூரம் இல்லை என்று ஆகிவிடாது. எனவே ஜனநாயக ரீதியாக கேள்விகள் கேட்பவர்களுக்கும், போராடுபவர்களுக்கும், இந்த அரசு உரிய பதில் அளிக்க வேண்டும். அந்த மாணவிக்கு ஏற்பட்டது போல் இனி எந்த மாணவிகளுக்கும், பெண்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்படாத வண்ணம் இந்த அரசு பாதுகாத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
![](https://dmdkparty.com/wp-content/uploads/2024/12/DMDK_PRESS_STATEMENT_26.12.2024.jpeg)