அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகத் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கும் நிலையில், அவர்களை கைது செய்து ஜனநாயகத்தை அடக்கும் திமுக அரசின் இந்த செயல் நிச்சியமாகக் கண்டிக்கக் கூடிய விஷயம். அதிமுகவினர் மாணவிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக கடமை, இதைத் தமிழக அரசு தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே ஜனநாயக ரீதியாகப் போராடுபவர்களைக் கைது செய்வதன் மூலம் அடக்கிவிடலாம் என்று இந்த அரசு மனக்கோட்டை கட்ட கூடாது. இது தவறான முன் உதாரணம், இந்த ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது. எனவே கைது செய்தவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த அதிமுகவினரைக் கைது செய்ததைக் கண்டித்து அறிக்கை
Releated Posts
மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து அறிக்கை
தமிழகத்தில் போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று தமிழக அரசின் மூலம் விளம்பரம் செய்யும் தமிழக முதல்வர், தன்னுடைய அதிகாரத்தில் ஒரு கையெழுத்திலேயே…
பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக மக்கள் புறக்கணித்து, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது குறித்து அறிக்கை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த 2020ல் ஆயிரம் ரூபாய்,…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து அறிவிப்பு
இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக…
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநரை சந்தித்தது குறித்து
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநர் அவர்களை மாலை 4 மணிக்கு, தலைமை…