அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்தது வரவேற்கத்தக்கது. இனிவரும் காலங்களில் யாரும் இதுபோன்று தவறு செய்யாமல் இருக்க இந்த தண்டனைகள் வழிவகுக்கும். நல்ல தீர்ப்பு வழங்கிய நீதி அரசர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இனி வரும் காலங்களில் இந்த தீர்ப்பு இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும் இந்தக் குற்றத்திற்கு பின்புலத்திலிருந்து ஞானசேகரனை இயக்கியது யார்?, இதற்கு பின் எவ்வளவு அரசியல் சக்தி கொண்ட பின்புலம் இருப்பவர்களாக இருந்தாலும், அவர்களையும் நீதியரசர்கள் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும். அப்போது தான் இந்த வழக்கில் மிகப்பெரிய வெற்றியை நாம் அடைந்ததாக அர்த்தம்.
