Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com

தேமுதிக-வின் முக்கிய கொள்கைகள்:

  • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின்முக்கிய கொள்கை விளக்கங்கள்.

  • தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பட்ட மக்களுக்கும் உன்ன உணவும், உடுத்த உடையும், இருக்க இருப்பிடமும் ஏற்படுத்திக் கொடுப்பது.

  • ஊழலற்ற, நேர்மையான மக்கள் ஆட்சியை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்போம்.

  • அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியையும் கற்போம்.

  • தமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவோம், சமச்சீர் கல்வியை கொண்டுவருவோம்.

  • தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்குவோம். இந்தியாவிலேயே வேலைவாய்ப்பில் முதல் மாநிலமாக மாற்றி, தனிமனித வருமானத்தை உயர்த்துவது.

  • மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள் அமைத்து, முதியோர்களை பேணிக்காப்போம்.

  • ரேசன் பொருட்கள் அனைத்து குடும்பங்களுக்கும் நேரடியாக விநியோகம் செய்யப்படும்.

  • குடும்பத்தில் ஒருவருக்கு படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிசெய்வோம்.

  • விவசாய தொழிலாளர்களுக்கு கறவை மாடு வழங்குவது.

  • ஆண்களுக்கு இணையாக பெண்களும், சமுதாயத்தில் நன்மதிப்புடன் வாழ்ந்திட 33% சதவிகிதம் நிச்சயம் எதிர்காலத்தில் 50% சதவிகிதம் லட்சியம்.

  • இந்தியாவில் உள்ள நதிகளை தேசிய மயமாக்கவும், நதிகளை இணைக்கவும் வேண்டும்.தமிழகத்தில் உள்ள நதிகளை இணைத்து, விவசாயத்திற்கும், குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு ஏற்படுத்துவது.

  • விவசாய விலை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்தல், நெசவுத் தொழிலை நவீனமாக்குவோம்.

  • அரசியலில் நேர்மை, நாணயம், மனித நேயம் ஆகியவற்றை கடைபிடிப்பது.

     

Scroll to Top
× வணக்கம், தேமுதிக...