Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டி அறிக்கை

தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டி அறிக்கை

கடந்த காலங்களில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.13-க்கு கொள்முதல் செய்த நிலையில், மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில் தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தைத் தனியாரிடம் இருந்து ரூ.35-க்கு கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? தமிழ்நாடு எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்ற கேள்வியை இன்று மக்கள் எழுப்பி வருகின்றனர்.

ஒருபுறம் மின்வெட்டு, மறுபுறம் மின்கட்டண உயர்வு என மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில், தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற அதிக விலைக்கு வாங்குவது எந்த வகையில் நியாயமானது? இதற்குத் தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். ஏற்கனவே மின்சாரத் துறை கடன் சுமையில் இருக்கும் நிலையில், தமிழ்நாடு சுமார் ரூ.10 லட்சம் கோடி கடனில் இருப்பதாகக் கூறப்படும் சூழலில், தனியாரிடம் தொடர்ந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதன் மூலம் மேலும் நிதிச்சுமையை ஏற்படுத்துவது எதற்காக? இந்தக் கொள்முதல் நடவடிக்கையின் அவசியம், விலை நிர்ணயம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும்.

தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்களை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். மின் உற்பத்தித் திட்டங்களை முன்னெடுப்பதை விடுத்து, மின்கட்டணத்தை உயர்த்துவதும், மின்வெட்டுக்கு வழிவகுப்பதும், தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதும் மக்களின் சுமையை மேலும் அதிகரிக்கும். மக்களின் வரிப்பணத்தையும், மாநிலத்தின் நிதிநிலையையும் கருத்தில் கொண்டு, மின்சார உற்பத்தியைப் பெருக்கி, நியாயமான விலையில் தடையற்ற மின்சாரம் வழங்குவதே அரசின் கடமையாகும்.

Releated Posts

மருத்துவப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பணி…

ByBySenthil KumarOct 12, 2026

சர்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் செய்தி

பெண் குழந்தைகள் நாட்டின் கண்கள்! பெண் குழந்தைகளைப் போற்றுவோம்! பெண்ணுரிமையைக் காப்போம்! பெண் குழந்தைகள் குடும்பத்தின் பெருமை மட்டுமல்ல; நாட்டின் எதிர்காலத்தையும் சமூகத்தின் முன்னேற்றத்தையும்…

ByBySenthil KumarOct 11, 2026

அரிசி விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தமிழகத்தில் கடந்த சில காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அரிசி விலை கடும்…

ByBySenthil KumarOct 8, 2026

மாணவர்களின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பதை கண்டித்து அறிக்கை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி ஒன்றியம், மானூர் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக்…

ByBySenthil KumarOct 8, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...