Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மருத்துவப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டி அறிக்கை

மருத்துவப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவப் பணியாளர்களின் கோரிக்கைகள் நீண்ட காலமாகத் தீர்வு காணப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவத் துறையில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள், தங்களின் வாழ்வாதாரத்தையும் பணிப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கோரி போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அவர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் அரசு மதித்து, அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டியது அவசியமாகும். பணி நிரந்தரம், உரிய ஊதியம் மற்றும் பணிப் பாதுகாப்பு ஆகியவை மருத்துவப் பணியாளர்களின் முக்கியமான கோரிக்கைகளாக உள்ளன.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுடன் அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவுடன் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுவோரின் குறைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, போராட்ட கலத்திற்கு வருவதற்கு முன்னாலேயே அவர்களை தடுத்து வீட்டுக்காவலில் வைப்பது எந்த வகையிலும் நியாயம் கிடையாது. எனவே இந்த சம்பவம் கண்டிக்கக்கூடியது. அவர்களை அழைத்து அவர்களின் உண்மையான கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்யவேண்டும். கேட்டுக்கொள்கிறேன்.

#dmdkparty #DMDK #DMDKITWING #PremallathaVijayakant #LKSudhish #Vijayaprabhakaran #doctor #nursing #NursingStudents

Releated Posts

சர்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் செய்தி

பெண் குழந்தைகள் நாட்டின் கண்கள்! பெண் குழந்தைகளைப் போற்றுவோம்! பெண்ணுரிமையைக் காப்போம்! பெண் குழந்தைகள் குடும்பத்தின் பெருமை மட்டுமல்ல; நாட்டின் எதிர்காலத்தையும் சமூகத்தின் முன்னேற்றத்தையும்…

ByBySenthil KumarOct 11, 2026

அரிசி விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தமிழகத்தில் கடந்த சில காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அரிசி விலை கடும்…

ByBySenthil KumarOct 8, 2026

மாணவர்களின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பதை கண்டித்து அறிக்கை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி ஒன்றியம், மானூர் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக்…

ByBySenthil KumarOct 8, 2026

அரசின் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்து செய்தி

2001 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி குஜராத் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்று தனது நிர்வாகப் பயணத்தைத் தொடங்கிய மாண்புமிகு பாரதப் பிரதமர்…

ByBySenthil KumarOct 7, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...