Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • ஊழல் மற்றும் கோயில் நில மோசடிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை தொடர வேண்டி அறிக்கை

ஊழல் மற்றும் கோயில் நில மோசடிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை தொடர வேண்டி அறிக்கை

சென்னை, மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தவெக நிர்வாகியுமான வீராசாமி மீது தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கில், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதை தேமுதிக வரவேற்கிறது. ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில், எந்தவித பாரபட்சமும் இன்றி உரிய சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும். ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடாகும். அதேபோல், பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம், போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களின் பெயரில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கோயில் நிர்வாகத்தின் புகாரின் அடிப்படையில் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதையும், இந்த முறைகேடு தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை சிபிசிஐடி (CBCID) வசம் மாற்றப்பட்டுள்ளது.  ஆனால், ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் சொத்து வெறும் ரூ.2 கோடிக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த மிகப்பெரிய முறைகேடு எவ்வாறு நடைபெற்றது, இதன் பின்னணியில் யார் யார் செயல்பட்டனர், எந்த அதிகாரிகள் அல்லது இடைத்தரகர்கள் இதற்கு உடந்தையாக இருந்தனர் என்பன குறித்து முழுமையான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும், தனிநபர்களாக இருந்தாலும், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், எந்தவித தயக்கமும் இன்றி அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து, நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். மேலும், முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ள அந்த நிலத்தை உடனடியாக மீட்டு, மீண்டும் பழனி தண்டபாணி சுவாமி மடத்தின் வசம் ஒப்படைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கோயில் சொத்துகள் மற்றும் பொதுச் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற முறைகேடுகள் இனி நடைபெறாத வகையில் பதிவு மற்றும் வருவாய்த் துறைகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும் என தேமுதிக சார்பாக  வலியுறுத்துகிறோம்.

Releated Posts

தேமுதிக – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் – தலைமை கழக அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும்…

ByBySenthil KumarSep 9, 2026

உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கப்பல் கட்டும் தளத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டி அறிக்கை

தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் சுமார் ரூ.30,000 கோடி முதலீட்டில் சிப்காட் மூலம் பசுமைத்தள கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய, மாநில அரசுகள்…

ByBySenthil KumarSep 9, 2026

மழையில் நனைந்து வீணாகும் நெல் மணிகளைப் பாதுகாக்க, தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கும்பகோணம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல் கொள்முதல்…

ByBySenthil KumarSep 7, 2026

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்அவர்களின் 155வது பிறந்தநாளில் அவரின் புகழை போற்றுவோம்

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக அஞ்சாமல் போராடி, சுதேசி உணர்வை மக்களிடம் விதைத்த வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் இன்று (05.09.2026) மிக பெரிய செல்வந்தாராக பிறந்து…

ByBySenthil KumarSep 5, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...