Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • அரசு ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய ஆளும் அரசைக் கண்டித்து அறிக்கை

அரசு ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய ஆளும் அரசைக் கண்டித்து அறிக்கை

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் திரு.ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை நிலவி வரும் அளவுக்கு, நிர்வாகச் சீர்கேடு இந்த ஆட்சியில் நிலவுகிறது. எனவே சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக மாறியுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்குச் சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாதது மிகவும் கண்டனத்திற்குரியது. அதேபோல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் பொய்யாமொழி நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, அரசுப் பள்ளிகளில் நடக்கும் அவலத்தை உடனடியாக சீர்படுத்த வேண்டும். பள்ளிகளில் ஏற்படும் இந்த அவலங்கள் அந்த துறைக்கே மிகப்பெரிய வெட்கக்கேடாக அமைந்துள்ளது.

Releated Posts

விருத்தாசலம் தொகுதியில் வறுமை ஒழிப்பு தினம் நிகழ்ச்சி

புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்களில் சிறப்பு…

ByBySenthil KumarAug 25, 2026

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...