மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திரு.சீதாராம் யெச்சூரி அவர்கள் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு 72 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். 2005 முதல் 2017 வரை மாநிலங்களவையில் உறுப்பினராக பதவி வகித்துள்ளார். நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்துவிட்டார் என்ற செய்தி மிகவும் துயரமானது. அவரின் ஆத்மா சாந்தி அடையவும், அவர் குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
