தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களின எண்ணிக்கையும், செவிலியர்கள் எண்ணிக்கையும் போதுமான பணியாளர்கள் இல்லாத அவலநிலை. பத்து ஆண்டுகளுக்கு முன் தேர்வு செய்யப்பட்ட 7 ஆயிரம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், 20 ஆயிரம் அரசு மருத்துவமனை உதவி பணி தொழிலாளர்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள், பொது சுகாதாரத்துறை ஆயுஷ் பணியாளர்கள் 3500 பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு கொரோனா காலத்திலும், மற்ற அனைத்து நேரங்களிலும் தன் உயிரையும், தன் குடும்பத்தையும் நினைக்காமல், பொதுமக்கள் சேவையில் சிறப்பாக செயல்பட்ட இந்த பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர்களாக இருக்கும் கிறிஸ்டல் சுமித், க்யூபிஎம்எஸ் (QPMS) ஆகிய ஒப்பந்த நிறுவனத்தின் கீழும், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் (EMRI GREEN HEALTH) நிறுவனத்தின் கீழ் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த ஒப்பந்ததாரர்களை இப்ப பணியில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு தொழிலாளர் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும், வார விடுப்பு விடப்பட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும், இதை எல்லாம் சம்மதித்து இந்த நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதா என தொழிலாளர் ஆணையம் இதை கண்காணிக்கிறதா என்பதெல்லாம் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களும், அரசு மருத்துவமனையில் உதவிப் பணி தொழிலாளர்களும், அரசு மருத்துவமனைகளில் செவிலியர் தொழிலாளர்களும், தமிழ்நாடு பொதுத்துறை ஆயூஷ் பணியாளர்கள் மதுரை, கரூர், சென்னை என பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தொழிலாளர்களின் கோரிக்கை குரல்கள் அரசு கவனத்திற்கோ, தொழிலாளர் துறைக்கோ கேட்கவில்லையா?. அரசு அதிகாரிகள் எங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தொடர்பு இல்லை என சொல்கிறார்கள். நீங்கள் ஒப்பந்ததாரருக்கு கீழ் பணி செய்கிறீர்கள் என்று தட்டிக் கழிக்கிறார்கள். ஒப்பந்ததாரர்களும் அவர்கள் இஷ்டம் போல் செயல்படுவதற்கு இது என்ன தனியார் நிறுவனமா என கேள்வி எழுகிறது. பொதுத்துறை நிறுவனம் அதிகமான மக்கள் பயன்படுத்தக்கூடிய மருத்துவம் சம்பந்தமான துறையாகும். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கொரோனா கால கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டனர். சமீபத்தில் கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவின் போது 108 ஆம்புலன்ஸ் சிறப்பாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றியது. பல உயிர்களை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் விபத்தில் இறந்துவிட்டார். இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு இரண்டு லட்சம் நிவாரணம் வழங்குகிறது. சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்குகிறது. இது எந்த விதத்தில் நியாயம் என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மேலும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரியக்கூடிய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கும், செவிலியர்களுக்கும், உதவி பணி தொழிலாளர்களுக்கும், சுகாதாரத் துறை ஆயுஷ் பணியாளர்களுக்கும் தீபாவளி போனஸ் உடனே வழங்க வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கையான உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வேண்டும். ஊதியம் 9 ஆயிரம் ரூபாய் என்பது போதுமானதாக இல்லை, குறைந்தபட்ச ஊதியம் மாதம் 18 ஆயிரம் ரூபாய் வழங்க தொழிலாளர் ஆணையம் தாமாக முன்வந்து மேலே குறிப்பிட்ட ஒப்பந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, தொழிலாளர்களின் நலனை காப்பாற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அவர்களின் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கக்கூடிய அவல நிலை ஏற்படும். இந்த நிலை ஏற்படாத வண்ணம் அரசு முழு கவனம் செலுத்தி சுகாதாரத் துறையும், தொழிலாளர் துறையும் உடனடியாக ஒப்பந்ததாரர்களை ரத்து செய்து, அனைத்து சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடிய ஒப்பந்ததாரரை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

