Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மத்திய பட்ஜெட் அறிவித்தது குறித்து அறிக்கை

மத்திய பட்ஜெட் அறிவித்தது குறித்து அறிக்கை

இந்தியாவுக்கு முக்கியமான ஒரு திட்டமாக இருப்பது நதிகள் இணைப்பு திட்டம், புல்லட் ரயில் திட்டம், GST வரியை குறைத்து அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகப்படியாக வேலை வாய்ப்புகளுக்கான எந்த ஒரு அறிவிப்பு திட்டம் இல்லை, மேலும் விலைவாசி உயர்வு குறைப்பதைப் பற்றிய அறிவிப்பும் இல்லை, இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி (TOLLGATE) ரத்து அறிவிப்பு இல்லாதது, இந்தியாவின் பழமை வாய்ந்த தமிழ் மொழியை இன்னும் ஊக்கப்படுத்துவதற்கு தனியாக பட்ஜெட் ஒதுக்கவில்லை, மாநிலங்களுக்கு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூபாய் 1.50 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், தமிழகத்தில் உள்கட்டமைப்பு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாநில சாலைகளாக இருந்தாலும் சரி, மாநிலங்களில் உள்ள சாலைகள் அனைத்தும் உலகத் தரத்திற்கு இணையாக அறிவிக்காதது, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரணம் அறிவிக்காதது ஏமாற்றத்தை தருகிறது. மேலும் அசாமில் யூரியா தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அறிவித்தது போல, தமிழ்நாட்டிலும் யூரியா மற்றும் மற்ற தொழிற்சாலைகள் வேலை வாய்ப்பை உருவாக்க அறிவிப்பு இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

இந்தியா முழுவதும் பருத்தி உற்பத்தியை அதிகரிக்கப் படுத்துவது, சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதம் ரூபாய் 20 கோடியாக அதிகரிக்கப்பட்டது, மேலும் மாநிலங்களுடன் இணைந்து நூறு மாவட்டங்களில் ரூபாய் 1.7 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் அறிவித்தது, கிராமங்களில் இருந்து பணிக்காக இடம் பெயருவதை தடுக்க திட்டம். பொம்மை தயாரிப்பு, துவரை, உளுந்து, பருப்பு வகைகளை அதிகமாக உற்பத்தி செய்து, தானிய உற்பத்தியில் இந்தியா பத்து ஆண்டுகளில் தன்னிறைவு பெற்றுள்ளது. வேளான் உற்பத்தியை பெருக்க திட்டங்கள் வகுப்பது, தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு ஐந்து லட்சம் பேருக்கு இரண்டு கோடி கடன் வழங்கப்படும் என்பது, எல்லோருக்கும் உணவு கிடைக்கும் வகையில் மாநிலங்களுடன் இணைந்து திட்டம் செயல்படுத்துவது, நாடு முழுவதும் 23 ஐஐடிகள் மேம்படுத்துதல், இந்திய மொழிப் பாடங்கள் அனைத்தும் விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்பது, குழந்தைகள் மற்றும் இளம் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவது, மருத்துவ கல்லூரியில் இந்தியா முழுவதும் 10 ஆயிரம் இடங்கள் அடுத்த ஆண்டில் இருந்து உயர்த்தப்படும் என்பது, அதே மாதிரி மூன்று ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்பது போன்ற திட்டங்கள் வரவேற்கப்படுகிறது. ஆனாலும் இந்த பட்ஜெட் “யானைப் பசிக்கு சோளப்பொறி” என்ற பழமொழிக்கு ஏற்ப அமைந்துள்ளது.

Releated Posts

தேமுதிக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாள் செய்தி : 12.02.2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (12.02.2025) தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) 25 ஆம் ஆண்டு வெள்ளி…

ByBySenthil KumarFeb 12, 2025

25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தொண்டர்களுக்கு கடிதம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் உயிரிலும் மேலான என் அன்பு கழக உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் முதற் கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பிப்ரவரி…

ByBySenthil KumarFeb 11, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொடி நாள் (பிப்ரவரி -12) 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கழகத்தின் கொள்கைகள் மற்றும் கொடியின் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கொள்பவர்கள் விபரம் – 11.02.2025

வ. எண்மாவட்டத்தின் பெயர்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பெயர் / பதவி1நாமக்கல் மாநகர் நாமக்கல் வடக்கு நாமக்கல் தெற்குதிருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், கழக பொதுச் செயலாளர்2செங்கல்பட்டுதிரு.டாக்டர்.V.இளங்கோவன்,M.B.B.S.,…

ByBySenthil KumarFeb 11, 2025

ரயிலில் கர்ப்பிணிப் பெண் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது கவலையளிக்கிறது. இதுபோன்ற துயர நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, கோவையிருந்து திருப்பதி செல்லும்…

ByBySenthil KumarFeb 7, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...