Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • புரசைவாக்கம், திடீர்நகர் திட்ட பகுதியில் அரசு மூலம் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு – தற்போது கிடப்பில் போடப்பட்ட தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மீண்டும் செயல்முறை படுத்திட வேண்டி அறிக்கை

புரசைவாக்கம், திடீர்நகர் திட்ட பகுதியில் அரசு மூலம் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு – தற்போது கிடப்பில் போடப்பட்ட தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மீண்டும் செயல்முறை படுத்திட வேண்டி அறிக்கை

எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டலம் 8 பழைய வட்டம் 104, புதிய வட்டம் 99, புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையிலுள்ள திடீர்நகர் திட்ட குடிசைப்பகுதியில் சுமார் 600- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஓலைக்குடிசையாய் இருந்த இவ்விடம் மழை மற்றும் வெயில் காலங்களில் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சுமார் 40 வருடங்களுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆணையின் பேரில் குடிசைகளை அகற்றி, அனைத்து வீடுகளுக்கும் கல்நார் ஓடு போட்டு, கல் சுவர்கள் கட்டி தரப்பட்டது. இருப்பினும் அப்பகுதி மக்கள் 50 ஆண்டு காலமாக எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி சுகாதாரமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்களின் இறந்த சடலங்களை வைப்பதற்கு கூட இடம் இல்லாமலும், இறப்பு சடங்குகள் செய்ய முடியாமலும் தவிக்கிறார்கள்.

மேலும் டாக்டர் பத்மபூஷன் கேப்டன் அவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது தேமுதிக 2011 முதல் 2016 வரை எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.நல்லதம்பி அவர்கள் பேரவையில் இந்த கோரிக்கை வலியுறுத்திய பொழுது மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் சட்டப்பேரவையில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்பிறகு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மூலம் பலமுறை கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டும், அப்பகுதி மக்களிடம் நேரில் ஆய்வு செய்தும், பயோ மெட்ரிக் சர்வே எடுக்கப்பட்டு அதிகாரிகள் உறுதியாளித்தார்கள். மேலும், இங்கு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றும், அதற்கான நிதி வழிமுறை உள்ளதென்றும் பலமுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த குடியிருப்புகளுக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான 18 தளங்கள் (TVH Lumbini Square) கொண்ட அடிக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. ஆகவே அப்பகுதி மக்களுக்கு அதே இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தந்து, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வதற்கும் அவர்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

மாநகராட்சியின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணம் நிதி வழங்க வேண்டி அறிக்கை

சென்னை திருவொற்றியூரில் தாங்கல் பீர் பயில்வான் தர்கா ரோடு பகுதியில் மின்சாரம் தாக்கி 12ஆம் வகுப்பு பள்ளி மாணவன் திரு.நஃபில் உயிரிழந்துள்ளார். டியூஷன் (Tuition)…

ByBySenthil KumarJul 3, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்

மருத்துவர்களின்  வரலாற்றில்,   மறக்க    முடியாத     நாள்   இன்று (01-07-2025) மருத்துவர்கள் தினம்! மருத்துவத்துறையில் முன்மாதிரியான மாநிலமாகத் திகழும் நமது தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களுக்குக் குறைவான…

ByBySenthil KumarJul 1, 2025

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து வரும் (05.07.2025) சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வெள்ளிச் சந்தை திடலில் சனிக்கிழமை…

ByBySenthil KumarJul 1, 2025

“மா” (மாம்பழம்) விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

“மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசை கண்டித்து வரும் (30.06.2025) திங்கள் கிழமை காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய…

ByBySenthil KumarJun 23, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...