பட்டினி தினம் என்று ஒருநாள் எப்போதும் இருக்கக் கூடாது. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் உறுதி செய்யப்பட வேண்டும். தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம் என்று அப்போதே மகாகவி பாரதியார் கூறியிருக்கிறார். அதனால் இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் பட்டினி என்பதும், உணவு இல்லை என்ற நிலை எந்த காலத்திலும் வரக்கூடாது என்பதில் கேப்டன் அவர்கள் உறுதியாக இருந்தார். அதன் வெளிப்பாடாகத்தான் அன்னதானத்தைப் பல ஆண்டுகளாக அவர் சார்ந்த சினிமாத் துறை மூலமாகவும், ரசிகர் மன்றங்கள் மூலமாகவும் மற்றும் தேமுதிக கட்சியின் மூலமும் கேப்டன் அவர்கள் அன்னதானத் திட்டத்தின் மூலம் நிரூபித்து இருக்கிறார். எனவே பட்டினி தினம் என்று ஒரு தினம் எங்கும் இல்லாத வண்ணம் இருக்க வேண்டும். இருப்பதிலே சிறந்த தானம் “அன்னதானம்” அந்த அன்னதானத்தை வழங்கி, பட்டினி சாவோ, பட்டினியால் மக்கள் வாடும் நிலை என்பது தமிழ்நாட்டில் எங்கும் வராத வண்ணம் தேமுதிக என்றைக்கும் மக்களுக்கு துணை நிற்கும்.
