Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பொங்கல் போனஸ் வழங்கவும், திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன் படி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும்அறிக்கை

பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பொங்கல் போனஸ் வழங்கவும், திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன் படி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும்அறிக்கை

தமிழக அரசின் பொங்கல் போனஸ் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைக்க முதல்வர் உறுதி செய்ய வேண்டும். 2012 ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கடந்த 12 ஆண்டுகளாகவும் பொங்கல் போனஸ் வழங்கப்படாமல் உள்ளதற்கு தேமுதிக கண்டிக்கிறது. 13 ஆண்டுகளாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்த முறையாவது பொங்கல் போனஸ் வழங்கத் தமிழக முதல்வரை தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறேன். இந்த பொங்கல் போனஸ் தொகையைத் தமிழ்நாடு அரசு நிதியிலிருந்து தான் வழங்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது அதனைத் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி கற்பித்துத் தருகின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைக்கப் பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சர் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஆனால் இந்த கோரிக்கையை கண்டுகொள்ளாமல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கைவிட்டதால் தான் ஒருமுறைகூட போனஸ் பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்ற முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்குப் பொங்கல் போனஸ் கிடைக்கும் போது, அதைப் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைக்கச் செய்வது தான் நியாயம் ஆகும். தற்போது ₹12,500 ரூபாய் சம்பளம் தான் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. குறைந்த சம்பளம் இந்த காலத்தில் போதுமா என்பதைத் தமிழக முதல்வர் அவர்கள் நினைத்துப் பார்த்து, பகுதிநேர ஆசிரியர்களுக்குத் தேர்தலின்போது கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் தொகுப்பூதியம் முறையை கைவிட்டு, காலமுறை சம்பளம் வழங்கப்பட்டால் தான் தற்போதுள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். எனவே பொங்கல் போனஸ் வழங்குவதோடு, பணிநிரந்தரம் செய்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கத் தமிழக அரசை தேமுதிக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

தேமுதிக – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் – தலைமை கழக அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும்…

ByBySenthil KumarSep 9, 2026

உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கப்பல் கட்டும் தளத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டி அறிக்கை

தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் சுமார் ரூ.30,000 கோடி முதலீட்டில் சிப்காட் மூலம் பசுமைத்தள கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய, மாநில அரசுகள்…

ByBySenthil KumarSep 9, 2026

மழையில் நனைந்து வீணாகும் நெல் மணிகளைப் பாதுகாக்க, தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கும்பகோணம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல் கொள்முதல்…

ByBySenthil KumarSep 7, 2026

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்அவர்களின் 155வது பிறந்தநாளில் அவரின் புகழை போற்றுவோம்

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக அஞ்சாமல் போராடி, சுதேசி உணர்வை மக்களிடம் விதைத்த வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் இன்று (05.09.2026) மிக பெரிய செல்வந்தாராக பிறந்து…

ByBySenthil KumarSep 5, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...