தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடை ஊழியர்கள் தொடர்ந்து மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இந்த நிலை தொடர்கிறது. உடனடியாக நியாய விலை கடைகளில் இருக்கின்ற ஊழியர்களுக்கு அவர்கள் கேட்கின்ற கோரிக்கையை நிறைவேற்றி, தீபாவளிக்கு இன்னும் ஒரு வார காலம் இருக்கும் தருணத்தில், அவர்களுடைய கோரிக்கையை செவி சாய்த்து உடனடியாக இந்த அரசு நிறைவேற்ற ஆவணம் செய்ய வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்.
