Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே இரு வேறு பகுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அறிக்கை

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே இரு வேறு பகுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அறிக்கை

  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அடுத்தடுத்து சிறுமிகள் பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவங்கள் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளன. சின்னப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் 12 வயது சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவமும், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறப்படும் சம்பவமும் மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை. குறிப்பாக, சிறு குழந்தைகள் மீதான இத்தகைய குற்றங்கள் சமூகத்தின் மனசாட்சியையே உலுக்கும் வகையில் உள்ளன. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது குறித்து பொதுமக்களிடையே அச்சமும் அதிருப்தியும் அதிகரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இந்த அரசின் சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தின் குறைபாடுகளுக்கான எடுத்துக்காட்டுகளாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, 3 வயது குழந்தை மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் மனிதநேயத்திற்கும் சமூக நெறிமுறைகளுக்கும் எதிரான, ஏற்றுக்கொள்ள முடியாத கொடூரமான செயலாகும். தமிழக மக்கள் அனைவரும் இந்த அரசு சட்டம்-ஒழுங்கு மேம்படுத்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும், மதுபோதையால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளை கட்டுப்படுத்தும், போன்ற வாக்குறுதிகளை நம்பி தற்போதைய அரசுக்கு வாக்களித்தனர். ஆனால், இதற்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. பாலியல் வன்கொடுமை போன்ற கொடூர குற்றங்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனைகள் மட்டுமே நிரந்தரத் தீர்வை உருவாக்கும் எனக் கருதுகின்றனர். “அரபு நாடுகளில் வழங்கப்படும் பொதுவெளி தண்டனையோ அல்லது என்கவுண்டரோதான் இதற்கான ஒரே தீர்வு” அதை இந்த அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

Releated Posts

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவு, பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும்.…

ByBySenthil KumarJun 24, 2026

அமோனியா வாயு கசிவுவால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சகரணை (கன்னிகைப்பேர்) பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர்ஸ் பால் சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட…

ByBySenthil KumarJun 24, 2026

திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணானதை கண்டித்து அறிக்கை

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே மழை காலம் தொடங்கும் சூழல் இருப்பதை கருத்தில் கொண்டு, திறந்தவெளியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் மழையால்…

ByBySenthil KumarJun 24, 2026

ஆளும் தவெக ஆட்சியில் அரசு பள்ளிகளில் நடக்கும் அவலங்களை குறித்து அறிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் பாடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரங்களில், மாணவர்களிடம் முதல்வர் விஜய் அவர்களின் புகைப்படத்தைக் காட்டி அவரின்…

ByBySenthil KumarJun 24, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...