Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் -பத்திரிக்கை செய்தி – 24.08.2025

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் -பத்திரிக்கை செய்தி – 24.08.2025

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை “வறுமை ஒழிப்பு தினமாக” தேமுதிக கடைப்பிடித்து வருகிறது. வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (24.08.2025) *புரட்சி அண்ணியார் கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்* அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் *சுயதொழில் செய்ய தள்ளுவண்டி, இஸ்திரி பெட்டி (அயன் இயந்திரம்), தையல் இயந்திரம், இட்லி குண்டான் (இட்லி கடை வைப்பதற்கு) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், அதேப்போல் ராமாபுரம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்குவதுபோல, மதிய உணவு மற்றும் நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் இந்த ஆண்டும் வழங்கப்பட்டது. மேலும் புதுடெல்லியில் உள்ள டெல்லி தமிழ் சங்கத்திற்கு ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவியாக 1 இலட்சம்* காசோலை வழங்கப்பட்டது.

       வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) இயன்றதை செய்வோம் இல்லாதவரக்கே என்ற கொள்கைப்படி பல்வேறு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாமில் இன்று (24.08.2025)கலந்து கொண்டு பயன்பெற்றனர்.உடன் கழக அவைத்தலைவர் திரு.டாக்டர்.வி.இளங்கோவன் அவர்கள், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், கழக இளைஞர் அணி செயலாளர் திரு.வி.விஜய் பிரபாகர் அவர்கள், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், கழக கொள்கை பரப்பு செயலாளர் திரு.ஆர்.மோகன்ராஜ்,Ex:MLA., அவர்கள், கழக துணைச் செயலாளர்கள் திரு.எம்.ஆர்.பன்னீர்செல்வம் அவர்கள், திரு.SSS.U.சந்திரன் அவர்கள், திருமதி.சுபா ரவி,Ex:MLA., அவர்கள், மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Releated Posts

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவு, பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும்.…

ByBySenthil KumarJun 24, 2026

அமோனியா வாயு கசிவுவால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சகரணை (கன்னிகைப்பேர்) பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர்ஸ் பால் சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட…

ByBySenthil KumarJun 24, 2026

திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணானதை கண்டித்து அறிக்கை

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே மழை காலம் தொடங்கும் சூழல் இருப்பதை கருத்தில் கொண்டு, திறந்தவெளியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் மழையால்…

ByBySenthil KumarJun 24, 2026

ஆளும் தவெக ஆட்சியில் அரசு பள்ளிகளில் நடக்கும் அவலங்களை குறித்து அறிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் பாடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரங்களில், மாணவர்களிடம் முதல்வர் விஜய் அவர்களின் புகைப்படத்தைக் காட்டி அவரின்…

ByBySenthil KumarJun 24, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...