தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் திரு.தா.வெள்ளையன் (76) உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் மன வருத்தம் அடைந்தேன். கேப்டன் அவர்களுக்கு நல்ல நண்பர், பழகுவதற்கு இனிமையானவர், வணிகர் சங்க மாநாடு நடைபெற்ற பொழுது அவர் அழைப்பை ஏற்று அந்த விழாவில் நான் பங்கேற்றதை நினைவு கூறுகிறேன். வணிகர் சங்கத்தில் வணிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். பல போராட்டங்களை நடத்தி வணிகர்களுக்கு துணையாக நின்றவர். உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஆத்மா சாந்தி அடையவும், அவர் குடும்பத்தாருக்கும், வணிகர் சங்கத்தை சேர்ந்த அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் திரு.தா.வெள்ளையன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி
Releated Posts
தேமுதிக கேப்டன் ஆலயத்தில் மகாத்மா காந்தி ஜெயந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு நாளில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தேமுதிக கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) இன்று (02.10.2024) 155வது மகாத்மாகாந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி அவர்களது திருவுருவ படத்திற்கு கழக துணைச்…
தமிழக அரசு உயர்த்த இருக்கும் சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டி அறிக்கை
சென்னையில் அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரியை மீண்டும் உயர்த்தும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே உயர்த்தப்பட்ட சொத்து…
தந்தை பெரியார் அவர்களின் 145 வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது
தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்தநாளான இன்று 17.09.2024 திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தேசிய முற்போக்கு…