ரேஷன் அட்டைக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் சேர்த்து வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். காலதாமதம் இல்லாமல் மக்களுக்குப் பணம் உடனடியாக போய்ச் சேர வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் சொல்வது மட்டும் இல்லாமல், அந்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றி, பொங்கல் பொருட்களோடு ஆயிரம் ரூபாயும் உடனடியாக இந்த அரசு மக்களுக்கு தரவேண்டும். ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் போய்ச் சேராத நிலையில், பொங்கலுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் வழங்க ஆவணம் செய்யவேண்டும். அதேபோல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உரிய நிவாரணத் தொகையைத் தமிழக அரசு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
