Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி, நிவாரண உதவியும் வழங்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி, நிவாரண உதவியும் வழங்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்கு நிவாரண உதவி வழங்க ஆவணம் செய்ய வேண்டும். தேங்கியுள்ள நீரில் பயிர்களின் வேர்கள் அழுகுவதுடன் வளர்ச்சி தடைப்பட்டு பயிர்கள் சேதமடைவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மேலும் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். எனவே விவசாய மக்களுக்கு உடனடியாக ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தி, அவர்களுக்குப் பயிர் இழப்பீட்டுக்கான தொகையை வழங்கி, அவர்களை இந்த இன்னலிலிருந்து காப்பாற்ற வேண்டி மத்திய, மாநில அரசை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவு, பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும்.…

ByBySenthil KumarJun 24, 2026

அமோனியா வாயு கசிவுவால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சகரணை (கன்னிகைப்பேர்) பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர்ஸ் பால் சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட…

ByBySenthil KumarJun 24, 2026

திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணானதை கண்டித்து அறிக்கை

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே மழை காலம் தொடங்கும் சூழல் இருப்பதை கருத்தில் கொண்டு, திறந்தவெளியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் மழையால்…

ByBySenthil KumarJun 24, 2026

ஆளும் தவெக ஆட்சியில் அரசு பள்ளிகளில் நடக்கும் அவலங்களை குறித்து அறிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் பாடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரங்களில், மாணவர்களிடம் முதல்வர் விஜய் அவர்களின் புகைப்படத்தைக் காட்டி அவரின்…

ByBySenthil KumarJun 24, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...