தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் வீடு இல்லாதவர்களுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என அரசு தெரிவித்தது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து கிராமப் பகுதிகளில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு மொத்த தொகையாக மூன்று லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இதில் கழிப்பறை கட்டுவதற்காக 12 ஆயிரம் ரூபாயும், மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் (NGNRGS) பணி செய்யும் நபருக்கு 314 ரூபாய் விதம் 90 நாட்களுக்கு 28 ஆயிரத்து 260 ரூபாயும், மீதமுள்ள மூன்று லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் 4 கட்டங்களாக வீடு கட்டும் நபருக்கு கொடுக்கப்படும். இவ்வாறு கட்டப்படக்கூடிய வீடுகளுக்கு முதல் கட்டப் பணி முடிந்த உடன், வரவு, செலவு கணக்குகளை ஒப்படைத்தவுடன் நிதி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் மூன்றாவது கட்ட பணி முடிந்த பின்னும், முதல் கட்ட பணிக்கான பில்லுகளுக்கான தொகையினை கொடுக்காமல் தாமதப்படுத்துகிறார்கள். இது வாங்குவதற்கு பல பிரச்சனைகளை சந்திக்கும் அவல நிலை உள்ளது. சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் ஏழை, எளிய மக்கள் எளிதில் பயன்படக்கூடிய அளவில் அம்மா சிமெண்ட் மிகவும் குறைந்த விலையில் விற்கப்பட்டது. அனைத்து மக்களும் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது அதே சிமெண்ட் 285 ரூபாய்க்கு வாங்கி கட்ட வேண்டிய அவல நிலை உள்ளது. சில தனியார் சிமெண்ட் மூட்டைகள் இந்தத் தொகைக்கும் கீழ் கிடைப்பதால், அதை வாங்கி பயன்படுத்தினால் பணம் கொடுக்க மாட்டோம் என புறக்கணிக்கிறார்கள். கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு அரசு சிமெண்ட் பயன்படுத்துவதால் சிமெண்டின் விலை மற்ற சிமெண்ட்களை காட்டிலும் குறைவாக இருந்தால் அனைத்து பொதுமக்களும் பயன்படும் வகையில் அமையும். எனவே அரசு உடனடியாக சிமெண்டின் விலையை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டும் ஏழை, எளிய மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கட்டுமான தொகைக்காக பில்லுகளோடு பல நாட்கள் அலைய விடுவது மிகவும் மோசமான செயலாகும். பொதுமக்கள் சிரமம் இல்லாமல் வீடு கட்டி குடியேற கலைஞரின் கனவு இல்லத்திட்டம் உதவும் வகையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மெத்தன போக்கை கைவிட்டு, உடனே நிதியினை ஒதுக்கி மக்களின் சிரமத்தை குறைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வெறும் வாக்குறுதிகளை மட்டும் அளித்து விட்டு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கடுமையாக கண்டிப்பதுடன். இந்த நிதியின் மூலம் பொதுமக்கள் எந்த சிரமமும் இல்லாமல் வீடு கட்டி குடியேற இந்த அரசு ஆவணம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் அவலநிலை குறித்து அறிக்கை
Releated Posts
திரு.இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், ஈரோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (14.12.2024) இயற்கை எய்தினார் என்ற…
பகுதி நேர ஆசிரியர்களின் கைதை கண்டித்து அறிக்கை
பகுதி நேர ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக தங்களுடைய உரிமைக்கான போராட்டத்தை முன் நிறுத்தி வருகின்றனர். ஆளும் திமுக அரசு, கொடுத்த வாக்குறுதிப்படி ஆட்சிக்கு வந்தவுடன்…
மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கயவர்களுக்கு கடுமையான போக்சோ தண்டனை வழங்கி இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை
சென்னை அயனாவரம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற…
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக பத்திரிகை செய்தி
டாக்டர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 68-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு இன்று (06.12.2024) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழக…