Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • டெல்லி தலைநகரில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை

டெல்லி தலைநகரில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை

டெல்லி செங்கோட்டை அருகே சுமார் 8 மணியளவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இதுவரையில் 8 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி வெறியாட்டத்தைத் தொடங்கியவர்கள் யார் என்பதை உடனடியாகப் புலனாய்வு செய்து அறிய வேண்டும். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அலசி ஆராய வேண்டும். இந்தச் செயலைச் செய்தது யார்? இது தீவிரவாத தாக்குதலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதை மத்திய அரசு உடனடியாகக் கண்டறிய வேண்டும். இந்தக் கோழைத்தனமான தாக்குதல் எதன் பொருட்டும் நியாயப்படுத்த முடியாததாகும், இத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும், அதே வேளையில், உயிரிழந்தவர்களின்  குடும்பத்தினர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Releated Posts

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை…

ByBySenthil KumarMar 8, 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கழக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மார்ச் 8 ஆம்…

ByBySenthil KumarMar 7, 2026

தேமுதிக சார்பில் மாநிலங்களாவை உறுப்பினராக போட்டியிடுவதற்கு வேட்பாளர் அறிவிப்பு பத்திரிக்கை செய்தி – 05.03.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடுவதற்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் இன்று (05.03.2026) கழக பொதுச்…

ByBySenthil KumarMar 5, 2026

தேமுதிக கழக பொருளாளர் 29வது திருமண நாளை முன்னிட்டு பத்திரிக்கை செய்தி – 05.03.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் திருமதி.சு.பூர்ணஜோதி அவர்களும் 29வது திருமண நாளான இன்று (05.03.2026) கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா…

ByBySenthil KumarMar 5, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...