சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் பெண் பழ வியாபாரி மாமூல் தர மறுத்ததாக கூறி கொடூரமாக கொலை செய்த ரவுடி, அதனை தடுக்க முயன்ற பெண்ணின் கணவரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் அதிகரித்துவரும் ரவுடிகள் கலாச்சாரத்தையும், கூலிப்படையையும் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, ஆட்சியாளர்களின் ஏவல் துறையாக மட்டுமே செயல்பட்டு வருவதால், பொதுமக்கள் தொடங்கி அனைத்து தரப்பினரின் உயிர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி நிகழும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்து, பலமுறை சுட்டிக்காட்டியும் அதனை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காத அரசு, நிர்வாகத்தின் மீதும், காவல் துறையின் மீதும் நம்பிக்கை இழந்து விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இனியாவது காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, சந்தி சிரிக்கும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகள் களைய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரவுடிகள் கலாச்சாரத்தை ஒடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
சென்னை திருவொற்றியூரில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி ரவுடியால் கொடூரக் கொலை – ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத்தவறிய தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து அறிக்கை
Releated Posts
திரு.இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், ஈரோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (14.12.2024) இயற்கை எய்தினார் என்ற…
பகுதி நேர ஆசிரியர்களின் கைதை கண்டித்து அறிக்கை
பகுதி நேர ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக தங்களுடைய உரிமைக்கான போராட்டத்தை முன் நிறுத்தி வருகின்றனர். ஆளும் திமுக அரசு, கொடுத்த வாக்குறுதிப்படி ஆட்சிக்கு வந்தவுடன்…
மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கயவர்களுக்கு கடுமையான போக்சோ தண்டனை வழங்கி இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை
சென்னை அயனாவரம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற…
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக பத்திரிகை செய்தி
டாக்டர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 68-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு இன்று (06.12.2024) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழக…