Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சென்னை கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியில் பாதுகாப்பு தர தவறிய தமிழக அரசை கண்டித்து அறிக்கை

சென்னை கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியில் பாதுகாப்பு தர தவறிய தமிழக அரசை கண்டித்து அறிக்கை

சென்னை கடற்கரையில் விமான சாகச நிகழ்வு சாவு நிகழ்வாக மாறியது கண்டனத்துக்கு உரியது. தமிழக முதல்வர் அவர்களும், தமிழக அரசும் ஒரு மாதமாகவே 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த விமான சாகச நிகழ்ச்சி பார்க்க வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். அதை நம்பி மக்களும் வந்து விட்டனர். ஆனால் அங்கு எந்தவித பாதுகாப்பு முன்ஏற்பாடுகள் செய்யாமல் 5 உயிர்கள் பலியாகி இருக்கிறது. அதுபோல நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்வு அரசினுடைய நிர்வாக சீர்கேட்டிற்கு முன்னுதாரணமாக அமைந்துவிட்டது. உலகமே வியக்க கூடிய அளவு விமானப்படையினர் சாகச நிகழ்வை மிகச் சிறப்பாக செய்து முடித்துள்ளனர். ஆனால் பாதுகாப்பு தர வேண்டிய தமிழக அரசு எந்தவித பாதுகாப்பும் செய்யாமல் தவறவிட்டது கண்டனத்துக்கு உரியது. மக்கள் நேற்று 5 மணி நேரத்திற்கும் அதிகமாக மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சரியான போக்குவரத்து வசதி, குடிநீர், கழிவறை மற்றும் அவசர மருத்துவ உதவி போன்ற எந்தவித வசதிகளும் முறையாக செய்யப்படவில்லை. வயதானோர், கர்ப்பிணிகள், மருத்துவ பிரச்சனை உள்ளவர்கள் இந்த சாகச நிகழ்வை பார்க்க வருவதை தவிர்க்க வேண்டி அறிவுறுத்தி இருக்க வேண்டும். ஆம்புலன்களையும், குடிதண்ணீர் லாரிகளையும் 100 அடிக்கு ஒரு இடத்தில் நிறுத்தி இருக்க வேண்டும்.  அதைபோல் ரயில்களையும், போக்குவரத்தையும் திட்டமிட்டு செயல் படுத்தியிருக்க வேண்டும். காவல்துறையினர் செய்வதறியாது மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து அவதிப்பட்டு கொண்டு இருக்கும் மக்கள், தமிழக அரசின் விமான சாகச நிகழ்வை காண வந்தும் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். மக்கள் கடும் அவதிக்கு உள்ளாக்கப்பட்டதற்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். அரசு அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் தங்களுக்கு மட்டும் எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக்கொண்டும் கருப்பு கண்ணாடி போட்டு கொண்டும் இருந்ததனாலோ என்னவோ மக்களின் கஷ்டம் அவர்களின் கண்களுக்கு தெரியாமல் போய்விட்டதோ?. தமிழக அரசு இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தேமுதிக சார்பில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகம் – 157வது மகாத்மாகாந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி – பத்திரிகை செய்தி – 02.10.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) இன்று (02.10.2026) 157வது மகாத்மாகாந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி அவர்களது திருவுருவ…

ByBySenthil KumarOct 2, 2026

தேர்தலில் EVM பயன்படுத்தி தேர்தல் நடத்துவதற்கு பதில் பழைய வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்தி தேர்தல் நடத்த வேண்டி அறிக்கை

இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்காளர் உரிமையை எந்தவிதத்திலும் பாதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது. வாக்காளர் திருத்தப்பட்டியல் தான் SIR அதில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக…

ByBySenthil KumarOct 1, 2026

கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்களின் துணிச்சலும், கடமை உணர்வையும் பாராட்டி அறிக்கை

கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்களின் துணிச்சலும், கடமை உணர்வும் மிகுந்த பாராட்டுக்குரியது. காயமடைந்த நிலையிலும் தனது வலியைப் பொருட்படுத்தாமல், பயணிகளின் உயிரைக் காப்பதையே முதன்மையாகக்…

ByBySenthil KumarOct 1, 2026

தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள் ஐநா நிகழ்வுகளில் பங்கேற்க நியூயார்க் பயணச் செய்தி

ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்டோபர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு…

ByBySenthil KumarSep 30, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...