Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்த 11 பேர்க்கு இரங்கல் செய்தி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்த 11 பேர்க்கு இரங்கல் செய்தி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் 11 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் இதுபோல் தென்காசி கடையநல்லூரில் தனியார் பேருந்துகள் அதிக வேகமாக சென்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுத்தி 7 பேர் உயிரிழந்து ஒருவாரத்திற்குள் மீண்டும் பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள்  நிகழ்வதால் போக்குவரத்து துறையும், தமிழக அரசும் இதில் தனி கவனம் செலுத்தி எதனால் இந்த விபத்து நடந்தது? பேருந்தில் ஏதேனும் கோளாறா? ஓட்டுநர்கள் வேகமாக பேருந்துகளை இயக்குகின்றனரா என்பதை ஆராய்ந்து அதற்கான பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதிக வேகம் விபத்து என்று தெரிந்தும் பேருந்துகள் வேகமாக இயக்குவது கண்டிக்கத்தக்க செயல். இனிமேல் இது போன்ற விபத்து ஏற்படாமல் இருக்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்.  உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி அவர்களைக் காக்க வேண்டியது இந்த அரசின் கடமை. அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கும்,  உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Releated Posts

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவு, பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும்.…

ByBySenthil KumarJun 24, 2026

அமோனியா வாயு கசிவுவால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சகரணை (கன்னிகைப்பேர்) பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர்ஸ் பால் சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட…

ByBySenthil KumarJun 24, 2026

திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணானதை கண்டித்து அறிக்கை

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே மழை காலம் தொடங்கும் சூழல் இருப்பதை கருத்தில் கொண்டு, திறந்தவெளியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் மழையால்…

ByBySenthil KumarJun 24, 2026

ஆளும் தவெக ஆட்சியில் அரசு பள்ளிகளில் நடக்கும் அவலங்களை குறித்து அறிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் பாடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரங்களில், மாணவர்களிடம் முதல்வர் விஜய் அவர்களின் புகைப்படத்தைக் காட்டி அவரின்…

ByBySenthil KumarJun 24, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...