சின்னக்கவுண்டர் படத்தின் தயாரிப்பாளர் திரு.V.நடராஜன் அவர்கள் (வயது 70) உடல் நலக்குறைவால் மறைந்துவிட்டார் என்று செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கேப்டனுக்கு மிகச் சிறந்த நண்பர், கேப்டனுக்கும், பல முன்னணி நட்சத்திரங்களுக்கும் மிகச் சிறந்த படங்களை தயாரித்துள்ளார். சின்ன கவுண்டர், முள்ளும் மலரும், உத்தம புருஷன், ராஜா கைய வச்சா, தர்ம சீலன், பங்காளி, பசும்பொன், நதியைத் தேடி வந்த கடல், கலியுகம், போன்ற சிறந்த படங்களை தயாரித்துள்ளார். அவரது இழப்பு குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, திரையுலகிற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

