புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு.ஜெகபர் அலி கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடியவரை விபத்து ஏற்படுத்தி படுகொலை செய்ததை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக புதுக்கோட்டை, திருமயம் தாலுக்கா அலுவலகம் அருகில் வரும் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் கனிம வளத்தை பாதுகாக்க போராடி வந்த சமூக ஆர்வலரை படுகொலை செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், பெண்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாவட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, மக்களுக்காக நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தித் தர வேண்டும்.
