கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு தேமுதிக சார்பாக நாங்கள் வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறோம். கள்ளக்குறிச்சி மற்றும் தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை இன்றைக்கு வெற்றி அடைந்திருக்கிறது. எனவே உண்மை நிலை மக்களுக்குத் தெரியப்படுத்த ஆளுங்கட்சியின் உடைய தலையீடு இல்லாமல், சிபிஐ நல்ல ஒரு தீர்ப்பை மக்களுக்கு வழங்க வேண்டும். கள்ளச்சாராய வழக்கில் பல உயிர்களை நாம் இழந்துள்ளோம் எனவே அவர்கள் குடும்பத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். மேலும் உண்மை நிலையைக் கண்டறிந்து அதில் யாரெல்லாம் கள்ளச்சாராய வழக்கில் ஈடுபட்டு இருக்கிறார்களோ அவர்களுக்கு உரியத் தண்டனையும் பெற்றுத் தர வேண்டும் என தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை வரவேற்று அறிக்கை
Releated Posts
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு முதலமைச்சர் பதில் தர வேண்டி அறிக்கை
அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்கார துயர சம்பவம் குறித்து முதலமைச்சர் இதுவரை பதிலளிக்காதது ஏன்?. அண்ணா பல்கலைக்கழகத்தில் திடீரென்று சிசிடிவி கேமராக்கள்…
விழுப்புரத்தில் 25 நாள் ஆகியும் மழை நீரை அகற்றாததைக் கண்டித்து அறிக்கை
விழுப்புரத்தில் அனைத்து இடங்களிலும் இன்னும் மழை நீர் வடியாமல் அப்படியே தேங்கி நிற்கும் அவல நிலை உள்ளது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இருக்கும் மழை…
அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதைக் கண்டித்து அறிக்கை
மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவனமான அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு,…
கொலை, கொலையா தமிழகத்தில் படுகொலைகள் நடப்பதைக் கண்டித்து அறிக்கை
நெல்லையில் நீதிமன்ற வாசலிலேயே இளைஞர் படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தையே இன்றைக்கு உலுக்கி இருக்கிறது. முன் விரோதம் காரணமாக இந்த படுகொலை செய்யப்பட்டதா அல்லது வேறு…