Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கடலூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், கொடுக்கன்பாளையம், பெத்தான்குப்பம், மலையடிகுப்பம், வானமாதேவி, கட்டாரசாவடி, ஆகிய கிராமங்களில் இரண்டாயிரத்திற்கும் (2,000) மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு சுமார் 170 ஏக்கரில் முந்திரி விவசாயம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறார்கள். மேலும் முந்திரி மரங்கள் மற்றும் பனை மரங்களை அழித்துவிட்டு, (காலணிகள்) தொழிற் பூங்கா [NON LEATHER FOOT WEAR PARK) அமைக்க போவதாக தமிழக அரசு அறிவித்து, தனியார் தொழிற்சாலைக்கு தாரைவார்க்கும் நோக்கில் பத்துக்கும் மேற்பட்ட ராட்சத இயந்திரங்களுடன் அகற்றி வருகிறார்கள். இதை வன்மையாக கண்டிப்பதுடன், அங்கு தனியார் தொழிற்சாலை அமைப்பதற்காக முதலமைச்சர் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த இடத்திற்கு தொழிற்சாலை வந்தால் இங்கிருந்து கடலூர் மாநகரத்திற்கு ஆதாரமாக இருக்கும் குடிநீர் மாசுபடும் நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி அங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பனை மரங்கள் பாதிக்கப்படும். மேலும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, நிலத்தடி நீர் வீணாகி அதைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும். இதனால் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவிடும். எனவே தமிழக அரசு இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி அறிக்கை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்தும், பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றியும் வரும் பருவகால…

ByBySenthil KumarSep 21, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 22ஆம் ஆண்டு துவக்க நாள் முன்னிட்டு கழகத்தின் கொள்கைகள் மற்றும் கேப்டன் அவர்களின் கொள்கைகள் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கொள்பவர்கள் விபரம்

வ. எண்மாவட்டத்தின் பெயர்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பெயர் / பதவி1தருமபுரி கிழக்குதிரு.டாக்டர்.V.இளங்கோவன்,M.B.B.S., அவர்கள் கழக அவைத்தலைவர்2தென் சென்னை வடக்கு தென் சென்னை தெற்குதிரு.L.K.சுதீஷ்,B.A.,MP., அவர்கள்,…

ByBySenthil KumarSep 21, 2026

தேமுதிக – தந்தை பெரியார் அவர்களின் 148வது பிறந்தநாள் – பத்திரிகை செய்தி – 17.09.2026

தந்தை பெரியார் அவர்களின் 148 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2026) தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள்…

ByBySenthil KumarSep 17, 2026

தேமுதிக – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A.,MLA., அவர்களின் தலைமையில் இன்று 16.09.2026 புதன் கிழமை காலை 10.30…

ByBySenthil KumarSep 16, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...